உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

15.03
விளம்பர மோகத்தில்: தடுமாறும் மக்கள்.!!!
IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!

முன்பள்ளி ஆசிரியைகள் ஒன்றிணைந்து — க்ளீன் ஸ்ரீ லங்கா சுற்றுச்சூழல் சிரமதானம்.!!!

முன்பள்ளி ஆசிரியைகள் ஒன்றிணைந்து— ஆசிரியைகள் பயிற்சி நிலையத்தில் ‘க்ளீன் ஸ்ரீ லங்கா’ சுற்றுச்சூழல் சிரமதானம்.!!!

புத்தளம் சவிவபுர முன்பள்ளி ஆசிரியைகள் பயிற்சி நிலையத்தில் இடம்பெற்ற கிளீன் சிறீலங்கா வேலைத்திட்டம்

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

அரசாங்கத்தின் கிளீன் ஸ்ரீ லங்கா வேலைத்திட்டத்துக்கு வலு சேர்க்கும் வகையில் புத்தளம் மாநகர சபை மேயர் பொறியியலாளர் ரின்சாத் அஹ்மதின் வேண்டுகோளை ஏற்று முன்பள்ளி ஆசிரியைகள் களம் இறங்கினர்.

புத்தளம் சவீவபுரத்தில் அமைந்துள்ள முன்பள்ளி ஆசிரியைகள் பயிற்சி நிலையத்தில் சுற்று சூழலை சிரமதானம் மூலம் துப்பரவு செய்யும் பணியிலேயே இவர்கள் ஒன்றிணைந்தனர்.

முன்பள்ளி ஆசிரியைகள் சங்கத்தின் தலைவி அமிதா எதிரிசிங்க தலைமையில் செவ்வாய்க்கிழமை (18) காலை நடைபெற்ற இந்த சிரமதான பணியில் புத்தளம் மாநகர சபையின் சமூக அபிவிருத்தி அதிகாரி திருமதி ரதி பிரதீப், முன்பள்ளிகளுக்கான பொறுப்பதிகாரி திருமதி தயானி உள்ளிட்ட முன்பள்ளிகளின் பொறுப்பாசிரியர்களும் கலந்து கொண்டனர்.

“சுற்றுச்சூழல் சிரமதான பணிகளில் மாநகர சபையை மாத்திரம் தங்கி இருக்காமல் ஒவ்வொரு தனி மனிதனும் தனது முழுமையான பங்களிப்பை வழங்க முன் வரவேண்டும்” என புத்தளம் மாநகர சபையின் மேயர் பொறியியலாளர் ரின்சாத் அஹ்மத் அண்மையில் முன்பள்ளி ஆசிரியைகள் மத்தியில் உரையாற்றும்போது தெரிவித்திருந்தார்.

புத்தளம் சவீவபுரத்தில் அமைந்திருக்கின்ற முன்பள்ளி ஆசிரியர்கள் பயிற்சி நிலையத்தில் வைத்தே அவர் இதனை தெரிவித்திருந்தார்.

அரசாங்கத்தின் கிளீன் ஸ்ரீ லங்கா வேலைத்திட்டத்தின் கீழ் புத்தளம் நகரில் இந்த சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விடயத்தில் நாம் முழு வீச்சாக இறங்கியுள்ளோம். இது விடயத்தில் முன்பள்ளி ஆசிரியர்கள் எம்மோடு இணைந்து பணியாற்ற முன்வரவேண்டும் எனவும் அவர் அறைகூவல் விடுத்திருந்தார்.

இதனையடுத்தே புத்தளம் நகரின் அனைத்து முன்பள்ளிகளின் ஆசிரியைகளும் இத்திட்டத்தில் இணைந்து கொள்ளும் பொருட்டு இந்த சிரமதான பணியில் அதிரடியாக களம் இறங்கினர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 709336

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time