உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

15.03
விளம்பர மோகத்தில்: தடுமாறும் மக்கள்.!!!
IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!

இந்திய கடற்படைத் தளபதியுடன் பிரதமர் ஹரிணி அமரசூரிய சந்திப்பு – இலங்கை கடற்படை அதிகாரிகளுக்கான பயிற்சி வாய்ப்புகள் குறித்து கவனம்.!!!

நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கைக்கு வந்துள்ள இந்திய கடற்படைத் தளபதி அட்மிரல் தினேஸ் கே. திருபதி (Admiral Dinesh K Tripathi) நேற்று (23) பாராளுமன்ற வளாகத்தில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை சந்தித்தார்.

இச்சந்திப்பில் இருநாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேம்படுத்தல், நீண்டகால நட்புறவை வலுப்படுத்தல், கடல்சார் மற்றும் பிராந்திய பாதுகாப்பு உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து கலர்துரையாடப்பட்டன.

மேலும் சட்டவிரோத போதைப்பொருள் கடத்தல், சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகள் போன்ற சவால்களை எதிர்கொள்ள கூட்டு அணுகுமுறை அவசியம் என வலியுறுத்தப்பட்டது, மேலும் இலங்கை கடற்படை அதிகாரிகளுக்கான பயிற்சி வாய்ப்புகளை இந்திய அரசாங்கம் வழங்குவதிலும் கவனம் செலுத்தப்பட்டது.

இந்திய கடற்படைத் தளபதி, இலங்கை கடற்படை 12ஆவணு தடவையாக ஏற்பாடு செய்துள்ள “காலி கலந்துரையாடல்” சர்வதேச கடல்சார் மாநாடு – 2025 இல் கலந்துகொண்டதன் பின்னர், நாளை (25) மீண்டும் நாடு திரும்பவுள்ளார்.

இச்சந்திப்பில் இந்திய உயர் அதிகாரிகள், பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரீ, மேலதிக செயலாளர் சாகரிகா போகஹவத்த, வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சின் தெற்காசிய மற்றும் SARCC பிரிவின் பணிப்பாளர் நாயகம் சமந்த பத்திரண உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 709445

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time