உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

15.03
விளம்பர மோகத்தில்: தடுமாறும் மக்கள்.!!!
IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!

அரச–தனியார் இணைந்த நிதியம்: அனர்த்த சேதத்துக்கு புதிய தீர்வு முறை – ஜனாதிபதி.!!!

வெள்ளம் மற்றும் மண்சரிவுகளால் நாடு முழுவதும் ஏற்பட்ட சேதத்தின் அளவு மேலோட்டமாகக் காணப்படுவது காட்டிலும் மிக அதிகம் எனவும், தற்போதைய திறைசேரி நிதிகளால் அந்த சேதத்துக்கு முழுமையான தீர்வு காண முடியாது எனவும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார்.

நாடு எதிர்நோக்கும் சூழ்நிலைக்கு மாற்று வழிகள் தேவைப்படுவதாக குறிப்பிடப்பட்ட நிலையில்,
அரச, தனியார் துறைகளை இணைத்து மத்தியதர மற்றும் நீண்டகால வேலைத்திட்டம் ஒன்றை தொடங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

இதன் ஒரு பகுதியாக, அனைவரின் பங்களிப்புடன் கூடிய புதிய நிதியம் ஒன்றை நிறுவுவது, அரச–தனியார் துறை பிரதிநிதிகள் கலந்து கொள்ளும் கூட்டு முகாமைத்துவக்குழுவை நியமிப்பது
எனும் நடவடிக்கைகள் அமைச்சரவை அங்கீகாரத்துடன் விரைவில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளன என்று ஜனாதிபதி தெரிவித்தார்.

நிதியை பல்வேறு வழிகளில் திரட்டுவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.

அதனடிப்படையில், உள்நாட்டில் உள்ள மக்களிடமிருந்தும், வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்களிடமிருந்தும், சர்வதேச அமைப்புகள் மற்றும் வர்த்தக சங்கங்களிடமிருந்தும் தேவையான உதவி நிதியைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும், இந்த பொறுப்புகள் முழுமையாக நியமிக்கப்படும் கூட்டு குழுவிற்கே ஒப்படைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

இந்த விவரங்களை ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற விசேட சந்திப்பின் போது ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அறிவித்தார்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 709310

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time