கட்டார் நாட்டைச் சேர்ந்த இராஜதந்திரி குழுவினர்; காத்தான்குடி அல் அக்ஸா ஜும்ஆப் பள்ளிவாயலுக்கு விஜயம்.!!!
(எம் எஸ் எம் நூர்தீன்)
கட்டார் நாட்டைச் சேர்ந்த இராஜதந்திரி ஷேஹ் அப்துல்லாஹ் அலி தானி அவர்களின் தலைமையிலான குழுவினர் இன்று(04) வெள்ளிக்கிழமை காத்தான்குடி அல் அக்ஸா ஜும்ஆப் பள்ளிவாயலுக்கு விஜயம் செய்தனர்.
மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசின் பிரதி தலைவருமான கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் அழைப்பின் பேரில் இக்குழுவினர் விஜயம் செய்தனர்.
காத்தான்குடி அல் அக்ஸா ஜும்ஆப் பள்ளிவாயல் தலைவரும் காத்தான்குடி நகர சபை உறுப்பினருமான ஜவாஹிர் தலைமையிலான பள்ளி வாயல் நிருவாகிகள் கட்டார் இராஜ தந்திரி குழுவினருக்கு பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்து வரவேற்றனர்.
இதன் போது ஜும்ஆத் தொழுகையை நிறைவேற்றிய குழுவினர் பள்ளி வாயலை பார்வையிட்டதுடன் பொது மக்களையும் சந்தித்து கலந்துரையாடினர்.