அவதூறாகப் பேசியதாகக் கூறி ITN-க்கு எதிராக 10 கோடி ரூபாய் நஷ்டஈடு கோரி — ரஜித் கீர்த்தி தென்னக்கோனின் சட்டநடவடிக்கை.!!!
(கொழும்பு செய்தியாளளர்)
தன்னை அவதூறாகப் பேசியதாகக் கூறி, அரச தொலைக்காட்சி நிறுவனமான (ITN)-க்கு எதிராக 10 கோடி ரூபாய் நஷ்டஈடு கோரி, ரஜித் கீர்த்தி தென்னக்கோன் சட்டக் கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.
இந்தக் கடிதம், 2025 ஜனவரி 9ஆம் தேதி ஒளிபரப்பப்பட்ட செய்தி அறிக்கை மற்றும் ஜனவரி 10ஆம் தேதி ஒளிபரப்பப்பட்ட “பத்தரென் எஹா” (Pattaren Eha) என்ற காலை நிகழ்ச்சியில் வெளியிடப்பட்ட கருத்துகளுக்காக அனுப்பப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த நிகழ்ச்சிகளில் விவசாய அமைச்சர் சமந்த வித்யாரத்ன வெளியிட்ட கருத்துக்களும், நிகழ்ச்சி தொகுப்பாளர் கூறிய மேலதிக கருத்துக்களும் பொய்யானதும் அவதூறானதுமாகும் என்று அவர் சட்டக் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
தன்னை ஊழல்வாதி மற்றும் நேர்மையற்ற நபராக சித்தரித்து, தனிப்பட்ட கௌரவத்திற்கும் சமூக மதிப்பிற்கும் தீங்கு விளைவிக்கும் நோக்குடன் இக்கருத்துகள் ஒளிபரப்பப்பட்டதாகவும் ரஜித் கீர்த்தி தென்னக்கோன் குற்றம் சாட்டியுள்ளார்.
இந்நிலையில், இச்சட்டக் கடிதம் தொடர்பாக இதுவரை ITN தரப்பிலிருந்து எந்தவொரு அதிகாரப்பூர்வ பதிலும் வெளியிடப்படவில்லை.