உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

15.03
விளம்பர மோகத்தில்: தடுமாறும் மக்கள்.!!!
IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!

ரணில் விக்ரமசிங்கவின் கைது தனிப்பட்டதொரு சம்பவமல்ல; ஜனநாயக அரசியலுக்கு விடுக்கப்பட்ட சவால் – சஜித் பிரேமதாஸ.!!!

முன்னாள் ஜனாதிபதி ரணில் கைது செய்யப்பட்டதை அடுத்து எழுந்துள்ள அரசியல் நிலைமை குறித்து கலந்துரையாட எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் தலைவர்களினது கூட்டமொன்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் தலைமையில் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று (25) நடைபெற்றது.

ரணில் விக்ரமசிங்கவின் கைது தனிப்பட்டதொரு சம்பவமல்ல, மாறாக ஜனநாயக அரசியலுக்கு விடுக்கப்பட்டதொரு வலுவான சவாலாகும் என இங்கு கருத்துத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, இந்த சவாலை எதிர்கொள்ள சகல எதிர்க்கட்சியைச் சேர்ந்த சகல அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்படுவதன் முக்கியத்துவத்தையும் அவர் சுட்டிக்காட்டினார்.

இதன் எதிர்காலப் பணிகளுக்காக கட்சிச் செயலாளர்களின் பங்கேற்புடன் ஒரு செயல்பாட்டுக் குழுவை நியமிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது. இன்று கூடிய சகல கட்சித் தலைவர்களும் ஆகஸ்ட் 27 ஆம் திகதி எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் மீண்டும் கூடுவதற்கும் இதன்போது தீர்மானிக்கப்பட்டது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 713904

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time