உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

15.03
விளம்பர மோகத்தில்: தடுமாறும் மக்கள்.!!!
IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!

வெளிநாடுகளில் உள்ள ஊழல் சொத்துக்கள் மீளப்பெற – உலக வங்கி, StAR அமைப்பு ஆதரவு.!!!

குற்றச் செயல்கள் மற்றும் ஊழல் மூலம் ஈட்டப்பட்டதாகக் கருதப்படும் வெளிநாடுகளில் உள்ள சொத்துக்களை மீண்டும் இலங்கைக்கு கொண்டுவர தேவையான தொழில்நுட்ப மற்றும் நிபுணத்துவ ஆதரவை வழங்க உலக வங்கி மற்றும் ஐ.நா. போதைப்பொருள் மற்றும் குற்றங்கள் தடுப்பு அலுவலகத்தின் கீழ் செயல்படும் StAR (Stolen Asset Recovery Initiative) அமைப்பின் உயர் அதிகாரிகள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

இதற்கான விசேட கலந்துரையாடல், நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தலைமையில் நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சில் இடம்பெற்றது.

இக்கலந்துரையாடலின் போது, “குற்றங்கள் மூலம் ஈட்டப்பட்ட சொத்துக்களை மீளப் பெற்றுக்கொள்ளும் சட்டம்” (Proceeds of Crime Act) கீழ், ஊழல் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் மூலம் வெளிநாடுகளில் மறைவாக வைத்திருக்கும் சொத்துக்களை மீளப் பெற இலங்கைக்கு தேவையான தொழில்நுட்ப வழிகாட்டல், தகவல் பரிமாற்றம், சட்ட நிபுணத்துவம் மற்றும் உலகளாவிய ஒத்துழைப்பை StAR அமைப்பு வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.

இதன் மூலம், இலங்கையில் ஊழல் தடுப்பு நடவடிக்கைகளும், சர்வதேச மட்டத்தில் சொத்துகளை மீட்டெடுக்கும் செயல்முறைகளும் வலுப்பெறும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 713706

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time