அரச ஊழியர்களின் சம்பள முரண்பாடுகளை தீர்க்க – புதிய பட்ஜெட்டில் தீர்வு.!!!
அரசு ஊழியர்களின் வேதன முரண்பாடுகளை தீர்க்க இந்த ஆண்டு பட்ஜெட்டில் சிறப்பு கவனம் செலுத்தப்படும் என்று பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த பட்ஜெட்டின் போது அரசு ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட சம்பள உயர்வின் மீதமுள்ள பகுதியை இந்த வருட பட்ஜெட்டில் வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் சந்தன அபேரத்ன தெரிவித்தார்.
அரச ஊழியர்களிடையே காணப்படும் வேதன முரண்பாடுகளைத் தீர்ப்பதற்காக தொடர்ந்தும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அமைச்சர் அபேரத்ன தெரிவித்துள்ளார்.