மாவிலாறு அணைக்கட்டு இடிந்து விழும் அபாயம் – மக்களுக்கு அவசர எச்சரிக்கை.!!!
மாவிலாறு நீர்த்தேக்கத்தின் அணைக்கட்டு இடிந்து விழும் அபாயம் உருவாகி வருவதாக நீர்ப்பாசன திணைக்கள பணிப்பாளர் நாயகம் அஜித் குணசேகர அவசர எச்சரிக்கை விடுத்துள்ளார்.
ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் தெரிவித்ததாவது:
மகாவலி கங்கையில் தற்போது மிகப் பெரிய அளவில் நீர் பாய்ந்து வருவதால், மாவிலாறு நீர்த்தேக்க பகுதி முழுவதும் ஒரே நீர்ப்பரப்பாக மாறியுள்ளதாகவும், அணைக்கட்டின் பாதுகாப்பு நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் கூறினார்.
இதனைத் தொடர்ந்து, மாவிலாறு நீர்த்தேக்கத்தின் தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்களும், அதைச் சுற்றியுள்ள கிராமப்புற வாசிகளும் தாமதமின்றி பாதுகாப்பான இடங்களுக்குத் திரும்பிச் செல்லுமாறு அவர் கேட்டுக்கொண்டார்.
அரசு அதிகாரிகள் மற்றும் மீட்பு பணிக்குழுக்கள் அவசரநிலை நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் கூடுதல் தகவல்கள் தெரிவிக்கின்றன.