உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

15.03
விளம்பர மோகத்தில்: தடுமாறும் மக்கள்.!!!
IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!

கிராமப்புற வளர்ச்சிக்கான புதிய அடித்தளம் நிகழ்ச்சித்திட்டத்தில் சாலை மேம்பாட்டுத் திட்டம் – மட்டு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் – கந்தசாமி பிரபு தலைமையில்.!!!

மட்டக்களப்பு மாவட்ட “கிராமப்புற வளர்ச்சிக்கான புதிய அடித்தளம்” நிகழ்ச்சித்திட்டத்தில் சாலை மேம்பாடு வழியாக மக்களின் வாழ்வாதார முன்னேற்றத்தை உறுதி செய்யும் நோக்கில், கிராமப்புறச்சாலை மேம்பாட்டுத்திட்டத்தின் தொடக்க நிகழ்வுகள் எதிர்வரும் 16.09.2025 மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு தலைமையில் தியாவட்டவான், புனாணை ஆகிய இடங்களில் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.

அதன்படி, எதிர்வரும் 16.09.2025ம் திகதி முற்பகல் 09:00 மணிக்கு மாங்கேணியில் ஆரம்ப நிகழ்வு இடம்பெறவுள்ளதுடன், 23 மில்லியன் நிதியொதுக்கீட்டில் 800 மீற்றர் நீளமுடைய கோறளைப்பற்று தெற்கு, புனாணை மேற்கு – மைலாந்தனை சிறீ முத்துமாரியம்மன் வீதியின் ஆரம்ப நிகழ்வு முற்பகல் 10.00 மணியளவிலும், 22 மில்லியன் நிதியொதுக்கீட்டில் 700 மீற்றர் நீளமுடைய கோறளைப்பற்று மத்தி, தியாவட்டவான் (210C) சமுர்த்தி வீதியின் முதலாவது குறுக்குத்தெருவுக்கான ஆரம்ப நிகழ்வு முற்பகல் 11.00 மணியளவிலும் இடம்பெறவுள்ளது.

ஆரம்ப நிகழ்வுகளில் தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச செயலகங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான கந்தசாமி பிரபு கலந்து கொள்ளவுள்ளார்.

அத்துடன், பிற்பகல் 01:30 மணிக்கு கன்னன்குடா, பிற்பகல் 03:00 மணிக்கு கிரான்குளம், பிற்பகல் 04:00 மணிக்கு களுவாஞ்சிக்குடி ஆகிய இடங்களிலும் குறித்த அபிவிருத்திட்டங்களுக்கான ஆரம்ப நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.

குறித்த நிகழ்வுகளில் பிரதேச மக்கள் பிரதிநிதிகள், பொது அமைப்புக்கள், பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ளுமாறு அழைக்கப்படுகின்றனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 709479

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time