மட்டக்களப்பில் ‘சறோஜா’ திட்டம் – 200 சிறுவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு.!!!
(மட்டக்களப்பு நிருபர்)
மட்டக்களப்பில் கிழக்கில் சிறுவர் பெண்களை பாதுகாக்கும் ‘சறோஜா’ திட்டத்தின் கீழ் 200 சிறுவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு பொலிஸ் அத்தியட்சகர் லலித் லீலாரத்ன தலைமையில் இன்று (03) திங்கட்கிழமை கல்லடியிலுள்ள சன்சயின் உல்லாச விடுதியில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பொலிஸ் சேவா வனிதா இயக்கத் தலைவியும் பொலிஸ் மா அதிபரின் துணைவியாரும், சட்டத்தரணியுமான நில்மினி நீட்டா சமரதுங்க பிரதம அதிதியாக கலந்துகொண்டு சிறுவர்களுக்கு கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி வருண ஜயசுந்தர, மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் டபிள்யூ.யு.டி கினிகே, 15 பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள், சிறுவர்கள் மற்றும் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
ஒவ்வொரு பொலிஸ் பிரிவிலும் பாதுகாப்பற்ற நிலையில் இருக்கும் சிறுவர்களில் முதற்கட்டமாக 200 சிறுவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டது.