கொழும்பில் சிறப்பாக கொண்டாடப்பட்ட; சவூதி அரேபியாவின் 95வது தேசிய தினம்.!!!
சவூதி அரேபியாவின் 95 வது தேசிய தினம் நேற்று செவ்வாய்க்கிழமை (23) இரவு கொழும்பு ITC ஹோட்டலில் நடைபெற்றது
இலங்கையிலுள்ள சவூதி அரேபியாவின் தூதுவர் ஹாலித் பின் ஹமூத் கஹ்தானியின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வின் பிரதம விருந்தினராக வீடமைப்பு நிர்மாணத்துறை பொது வசதிகள் அமைச்சர் அநுர கருணாதிலக பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.
இந்த நிகழ்வில் எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா உட்பட அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் வெளிநாடுகளின் தூதுவர்கள் உயர்ஸ்தானிகர்கள் இராஜதந்திரிகள் சவூதி அரேபிய தூதரக அதிகாரிகள் முக்கியஸ்தர்கள் ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதன் போது சவூதி அரேபியாவின் 95 வது தேசிய தினத்தையொட்டி கேக் வெட்டப்பட்டது.
சவூதி அரேபியாவின் 2030 நோக்கிய இலக்கு அதன் வேலைத்திட்டம் சர்வதேச ரீதியிலான உறவு இலங்கையுடனான சவூதி அரேபியாவின் நட்பு இலங்கையில் மேற் கொள்ளப்பட்டு வரும் அபிவிருத்தி வேலைத் திட்டங்கள் தொடர்பாக சவூதி அரேபியாவின் தூதுவர் ஹாலித் ஹமூத் கஹ்தானி விளக்கி கூறியதுடன் இலங்கை சவூதி நட்புறவு பற்றி நிகழ்வின் பிரதம விருந்தினர் வீடமைப்பு நிர்மாணத்துறை பொது வசதிகள் அமைச்சர் அநுர கருணாதிலக உரையாற்றினார்.




















