பாடசாலைகளில் பாட நேரங்களில் ஏற்படவுள்ள மாற்றம் தொடர்பில்; வெளியான தகவல்.!!!
பாடசாலைகளில் ஒரு பாடத்திற்காக ஒதுக்கப்படும் நேரம் 50 நிமிடங்களாக அதிகரிக்கப்படுவதோடு 08 ஆக காணப்பட்ட பாடத்திட்ட அமைப்பு 07 ஆக குறைக்கப்படும் என கல்வி உயர்கல்வி மற்றும் தொழில்நுட்ப கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ தெரிவித்துள்ளார்.
2026 ஆம் ஆண்டு முதல் செயற்படுத்தப்படவுள்ள புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து தெளிவுப்படுத்தும் கூட்டம் நேற்று(12) அநுராதபுரத்தில் நடைபெற்றது.
இக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் இந்த சீர்திருத்தங்களை ஆரம்பிக்கவுள்ளோம். அதன் முதல் படியாக அனைத்து பாடசாலைகளிலும் தரம் 01 முதல் 06 வரையுள்ள வகுப்புகளில் நடைமுறைப்படுத்தப்படும்.