உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

March 17, 2026

Hot News

15.03
விளம்பர மோகத்தில்: தடுமாறும் மக்கள்.!!!
IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!

36 வருட கல்விப் பணியிலிருந்து ஓய்வு பெற்ற றபா ஆசிரியைக்கு – சேவை நலன் பாராட்டு விழா.!!!

பல்வேறு பாடசாலைகளில் 36 வருடங்களாக கல்விப்பணியாற்றி தன்னுடைய அறுபதாவது வயதினை பூர்த்தி செய்து இன்றைய தினம் ஓய்வு பெற்ற மட்/மம/ ஹிழுறிய்யா வித்தியாலயத்தின் ஆசிரியரும் ஆரம்பக் கல்விப் பிரிவின் பகுதித் தலைவருமான றபா ஆதம்லெப்பை அவர்களுக்கான சேவை நலன் பாராட்டு விழா பாடசாலையினுடைய அதிபர் எஸ்.ஐ. யஸீர் அறபாத் அவர்களின் தலைமையில் இன்று (06) மிகச் சிறப்பாக படசாலையில் இடம் பெற்றது.

பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், அபிவிருத்தி நிறைவேற்று குழு உறுப்பினர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களினுடைய ஏற்பாட்டில் இந்நிகழ்வு இடம் பெற்றது.

காத்தான்குடி பிரதேசத்தின் முதலாவது கல்விமானி பட்டதாரியான றபா ஆதம்லெப்பை ஆசிரியர் அவர்கள் கல்விச் சமூகத்திற்கு பெரும் பங்காற்றி பல மாணவர்களை உருவாக்கி இருப்பதாகவும் கல்விப் பணியைத் தாண்டி பாடசாலைகளில் பல்வேறு புறக்கீர்த்திய செயற்பாடுகளிலும் தொடரான பங்களிப்புகளை மேற்கொண்டு வந்த ஒருவர் எனவும் ஓய்வு பெற்றாலும் பாடசாலையினுடைய தொடரான அபிவிருத்தி பணிகளில் அவர்கள் தொடர்ந்தும் பங்களிப்புச் செய்ய வேண்டும் எனவும் பாடசாலை அதிபர் எஸ்.ஐ.யஸீர் அறபாத் அவர்கள் இந்நிகழ்வில் ஆற்றிய தன்னுடைய உரையில் தெரிவித்தார்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 706077

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time