உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

15.03
விளம்பர மோகத்தில்: தடுமாறும் மக்கள்.!!!
IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!

இரத்த சேகரிப்பில் பெரும் நெருக்கடி — பொதுமக்களிடம் அவசர வேண்டுகோள்.!!!

நாடு முழுவதும் நீடித்து வரும் அனர்த்த சூழ்நிலை காரணமாக, அவசர சிகிச்சைக்குத் தேவையான இரத்தத்தைச் சேகரிப்பதில் கடும் சிக்கல்கள் உருவாகியுள்ளதாக தேசிய இரத்தப் பரிமாற்ற நிலையத்தின் பணிப்பாளர் டாக்டர் லக்ஸ்மன் எதிரிசிங்க தெரிவித்துள்ளார்.

டாக்டர் லக்ஸ்மன் எதிரிசிங்க தெரிவித்ததாவது: “வழமையாக எமக்கு தினமும் சுமார் 1,500 அலகுகள் இரத்தம் தேவைப்படுகிறது. ஆனால், தற்போதைய அனர்த்த நிலைமையால், நாடு முழுவதும் நடத்தப்பட்டு வந்த நடமாடும் இரத்ததான முகாம்களை நடத்த முடியாத நிலையில் உள்ளோம்.”

இதன் விளைவாக, அத்தியாவசியமான இரத்த சேகரிப்பு கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நிலைமை தொடர்ந்தால் இரத்த கையிருப்பு குறைந்து, மருத்துவமனைகளின் சிகிச்சை நடவடிக்கைகளில் பெரும் தடங்கல் ஏற்படும் அபாயம் உள்ளது.

தேவையை பூர்த்தி செய்யும் வகையில்,
நாடு முழுவதும் உள்ள சில முக்கிய இரத்த வங்கிகள் சிறப்பு முறையில் திறக்கப்பட்டுள்ளன என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவசர வேண்டுகோளில் அவர் மேலும் தெரிவித்ததாவது: “இது ஒரு தேசிய நெருக்கடி., தகுதியுள்ள அனைத்து பொதுமக்களும் உடனடியாக அருகிலுள்ள இரத்த வங்கிகளில் சென்று இரத்த தானம் செய்து நாட்டை மீட்பதில் பங்காற்ற வேண்டும்.” என்றார்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 709313

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time