உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

Print
மக்கள் ஒத்துழைப்பே பாதுகாப்பின் அடித்தளம்.!!!
15.03
விளம்பர மோகத்தில்: தடுமாறும் மக்கள்.!!!

மட்டக்களப்பில் அதிரடி: 3 ஆண்டுகள் தலைமறைவான மோசடிப் பேர்வழி 13 பிடியாணைகளுடன் கைது.!!!

சினிமா பாணியில் கடந்த 3 ஆண்டுகள் பொலிஸாருக்கு தண்ணி காட்டி வந்த மோசடிப் பேர்வழி, மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸாரினால் திருகோணமலையில் வைத்து அதிரடியாக கைது செய்யப்பட்டார்.

மட்டக்களப்பில் முகத்துவாரம் – நாவலடி பகுதியைச் சேர்ந்த 37 வயதுடைய நபர் ஒருவர், வெளிநாடு அனுப்பி வைப்பதாக கூறி பலரிடமிருந்து பல இலட்சம் ரூபாய் மோசடி செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டார். இதுகுறித்து ஏறாவூர் மற்றும் மட்டக்களப்பு பொலிஸ் நிலையங்களில் பாதிக்கப்பட்டவர்கள் முறையிட்டிருந்தனர்.

ஏற்கனவே சிறையில் இருந்த இவர் பிணையில் வெளியே வந்த பிறகு நீதிமன்றத்தை மதிக்காமல் தலைமறைவானார். கடந்த 3 ஆண்டுகளில் பொலிஸாரின் பிடியில் சிக்காமல் தப்பிய இவருக்கு எதிராக: திறந்த 09 பிடியாணைகள்,
சாதாரண 04 பிடியாணைகள் என
மொத்தம் 13 பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்டிருந்தன.

இரகசியத் தகவலின் அடிப்படையில், திருகோணமலை – சேருநுவர பகுதியில் பதுங்கியிருந்த இவரது வீட்டை பொலிஸார் சுற்றி வளைத்து அதிரடியாக கைது செய்தனர். இவருக்கு எதிராக தற்போது 26 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

நேற்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட இவர், 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவிட்டுள்ளார். பிணையில் நிறுத்தப்பட்டவர்களும் இப்போது பின்வாங்கியதால், இனி தப்பிப்பது கடினமாகும்.

இந்த கைது, பொதுமக்கள் மத்தியில் நம்பிக்கையையும், காவல்துறையின் செயல்திறனையும் வெளிப்படுத்தும் அதிரடி நடவடிக்கையாக மதிக்கப்படுகிறது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 715011

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time