உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

March 17, 2026

Hot News

15.03
விளம்பர மோகத்தில்: தடுமாறும் மக்கள்.!!!
IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!

மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் அதிர்ச்சி தீர்ப்பு — 12 வயது சிறுமியை துஷ்பிரயோகம் செய்த மாமாவுக்கு 40 ஆண்டுகள் கடூழிய சிறை.!!!

மட்டக்களப்பு மேல் நீதிமன்றத்தில் இடம்பெற்ற வழக்கில், 12 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில், எதிரியான மாமாவுக்கு 40 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

குற்றத்தில் சிக்கிய மாமாவுக்கு, நேற்று (21) மேல் நீதிமன்ற நீதிபதி ரி.ஜே. பிரபாகரன் இந்த கடும் தீர்ப்பை வழங்கினார்.

குற்றவாளி, “கடைக்கு போக வேண்டுமென்று” ஏமாற்றி சிறுமியை தனது வீட்டிற்குள் அழைத்து சென்று கதவை அடைத்து குற்றம் புரிந்ததாக சிறுமி நீதிமன்றத்தில் அழுகையுடன் சாட்சியம் அளித்தார்.

பாடசாலையில் பாலியல் பாதுகாப்பு தொடர்பான பாடங்களை கற்ற சிறுமி ஆசிரியர்கள், “இத்தகைய சம்பவம் நடந்தால் உடனே தெரிவிக்க வேண்டும்” என அறிவுறுத்தியதை அடுத்து, சிறுமி சோகமாக இருப்பதை கவனித்த ஆசிரியர் கேட்டபோது, உண்மையை வெளிப்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டது.
உடனடியாக ஆசிரியர்கள் சம்பவத்தை பொலிஸாருக்கு அறிவித்தனர்.

நீதிபதி TJ பிரபாகரன், சிறுமியின் வயது, விளைந்த உளச்சிதைவு மற்றும் குற்றத்தின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, 40 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை, ரூ. 3,00,000 நட்டஈடு செலுத்த உத்தரவிட்டார். நட்டஈட்டை செலுத்தத் தவறினால், மேலும் 3 ஆண்டு சிறை மற்றும் ரூ. 30,000 அபராதம் விதிக்கப்படும் என்றும் தீர்ப்பளித்துள்ளார்.

அரச சட்டத்தரணி M.A.M. லாபீர், அரச சட்டத்தரணி அனுசங்கன் ஆகியோர் சட்டமா அதிபர் சார்பில் வழக்கை நெறிப்படுத்தினர்.

மட்டக்களப்பை அதிர வைத்த இந்த சம்பவம், குழந்தைகள் பாதுகாப்பு குறித்து மேலும் விழிப்புணர்வு தேவை என்பதை மீண்டும் வெளிப்படுத்துகிறது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 706045

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time