மட்டக்களப்பு மாவட்ட அரச அதிகாரிகளுக்கான நான்கு நாள் விசேட செயலமர்வு ஆரம்பம்.!!!
மட்டக்களப்பு மாவட்ட நிறுவாக அரச அதிகாரிகளான பிரதேச செயலாளர்கள், பிரதித் திட்டமிடல் பணிப்பாளர்கள், நிருவாக உத்தியோகத்தர்கள், தொழில்நுட்ப உத்தியோகத்தர்கள், தொழில்நுட்ப உதவியாளர்கள் மற்றும் மாவட்ட செயலக பதவிநிலை உத்தியோகத்தர்களுக்கான விசேட 4 நாள் செயலமர்வு மாவட்ட அரசாங்க அதிபர் தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இன்று (22) ஆரம்பமானது.
மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி. சுதர்சினி ஸ்ரீகாந்தின் ஒருங்கிணைப்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இச்செயலமர்வு பெறுகை முகாமைத்துவம் மற்றும் ஒப்பந்த நிர்வாகம் ஆகிய பரப்புக்களை உள்ளக்கி அவற்றில் உள்ள புதிய விடயங்கள் தொடர்பாக அரச அதிகாரிகளக்கு தெழிவு படுத்தும் நோக்குடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
நான்கு நாட்கள் கொண்ட இச்செயலமர்வின் முதல் கட்டம் 22 மற்றும் 23 ஆந் திகதிகள் இடம்பெறுகின்றன. இச்செயலமர்வின் வளவாளராக ஓய்வு பெற்ற வடமாகாண பிரதி பிரதம செயலாளரும், பொறியியல் நிபுனருமான எஸ். சன்முகநந்தன் கலந்து கொண்டு விளக்கங்களையும், சந்தேகங்களுக்கான தெளிவுகளையும் வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.






