காலம்பிந்திய முறைப்பாடுகள் மற்றும் தீர்க்கப்படாத பல்வேறுபட்ட முறைப்பாடுகளுக்கு; வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் – விஷேட விசாரணை.!!!
(எம்.அஸ்பாக்)
காலம்பிந்திய முறைப்பாடுகள் மற்றும் தீர்க்கப்படாத பல்வேறுபட்ட முறைப்பாடுகளையும் உடனடியாக தீர்க்கும் வகையில் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் இன்று (08) விஷேட விசாரணை நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்த விசாரணைகளுக்காக சம்மந்தப்பட்டவர்களை அடையாளம் கண்டு அவர்களை விசாரிப்பதற்காக வாழைச்சேனை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட சகல பகுதிகளிலும் சுமார் 30 பொலிஸ் உத்தியோகத்தர்கள் வரை கடமையில் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிகழ்வு G.லலித் லீலாரத்ன (SSP) மற்றும் MSM. ஜருள் (ASP) ஆகியோரின் பங்குபற்றுதலோடு இன்று திங்கட்கிழமை வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் நடைபெற்றது.
காலம்பிந்திய முறைப்பாடுகள் மற்றும் தீர்க்கப்படாத பல்வேறு பட்ட முறைப்பாடுகளும் பொலிசாரின் விசாரணைகளுக்குப் பிறகு முடிவுக்கு கொண்டுவரப்பட்டதோடு சில முறைப்பாடுகள் நீதிமன்றுக்கும் மாற்றப்பட்டன.







