உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

15.03
விளம்பர மோகத்தில்: தடுமாறும் மக்கள்.!!!
IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!

இலங்கை தமிழரசுக் கட்சி – ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இடையே விசேட சந்திப்பு.!!!

இலங்கைத் தமிழரசுக் கட்சியும் (ITAK) ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவும் இடையிலான விசேட சந்திப்பொன்று இன்று (19) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பில் தமிழரசுக் கட்சியின் 8 நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர்.

இலங்கைத் தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன் தெரிவித்ததாவது: தமிழ் மக்களின் அரசியல் தீர்வு குறித்து வரும் ஆண்டில் பேச்சுவார்த்தைகள் தொடங்கப்படும் என ஜனாதிபதி உறுதியளித்துள்ளார். தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்தும் கலந்துரையாடல் நடைபெற்றுள்ளது.

மேலும், கட்சியின் பதில் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் கூறியதாவது: திருகோணமலை புத்தர் சிலை தொடர்பான பிரச்சினை ஜனாதிபதியுடன் விவாதிக்கப்பட்டது. மாகாண சபைத் தேர்தல்கள் விரைவில் நடத்தப்படும் என ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்.

தமிழ் அரசியல் விவகாரங்கள், மாகாண நிர்வாகம், நீதியும் சமத்துவமும் சார்ந்த பல முக்கிய அம்சங்கள் இந்த சந்திப்பில் எடுத்துரைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 709335

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time