உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

இலங்கையின் 37ஆவது புதிய பொலிஸ் மா அதிபராக; பிரியந்த வீரசூரியவை நியமிக்க – அரசியலமைப்பு பேரவை அனுமதி.!!!

நாட்டின் 37 ஆவது பொலிஸ்மா அதிபராக, பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவை நியமிப்பதற்கு அரசியலமைப்பு பேரவை அனுமதி வழங்கியுள்ளது.

அரசியலமைப்பு சபை இன்று (12) சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் கூடியபோதே மேற்படி அனுமதி வழங்கப்பட்டது.

புதிய பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரியவை நியமிப்பதற்கு அவரது பெயரை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கடந்த வாரம் கூடிய அரசியலமைப்பு பேரவைக்கு பரிந்துரைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

Total Websites Views

Total Views: 312553

Search

விளம்பரங்கள்