உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

15.03
விளம்பர மோகத்தில்: தடுமாறும் மக்கள்.!!!
IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!

இலங்கையில் முதல் முறையாக இடம்பெற்ற; தெற்காசிய சாரணர் மாநாடு.!!!

இலங்கை சாரணர் தலைமையகத்தில் இன்று (13) நடைபெற்ற தெற்காசிய தேசிய சாரணர் அமைப்புகள் சங்கத்தின் தலைமை ஆணையாளர்களின் மாநாட்டில் உரையாற்றும் போது அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

இதன்போது, கருத்து தெரிவித்த அவர்,

“தெற்காசிய பிராந்தியத்தில் சாரணர் இயக்கத்தின் முன்னேற்றத்திற்காக இலங்கையில் இதுபோன்ற ஒரு மாநாட்டை நடத்துவது சாரணர் இயக்கத்திற்கும், நாட்டிற்கும் கௌரவமாகும் என்றும், இதன் மூலம் தெற்காசிய பிராந்திய ஒத்துழைப்பை மேம்படுத்தும் வாய்ப்பு கிடைக்கும்” என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த மாநாடு இதற்கு முன்பு மற்ற நாடுகளில் நடத்தப்பட்டுள்ளது. ஆனால் இலங்கையில் இதுபோன்ற ஒரு மாநாடு நடத்தப்படுவது இதுவே முதல் முறை. சாரணர் இயக்கம் மேலும் வெற்றிபெற வாழ்த்துவதோடு, பிராந்திய ஒத்துழைப்பை அதிகரிக்க இதை ஒரு தளமாகப் பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்வதாகவும் மேலும் குறிப்பிட்டார்.

இந்த நிகழ்வில் உலக சாரணர் சங்கத்தின் பொதுச் செயலாளர் டேவிட் பெர்க், இலங்கையின் தலைமை சாரணர் ஆணையாளர் சட்டத்தரணி ஜனபிரித் பெனாண்டோ, தலைவர் ரன்சிறி பெரேரா, பெண் சாரணர் சங்கத்தின் தலைமை ஆணையாளர் டொக்டர் குஷாந்த ஹெராத், ஜெதா.ஆர்.சி. பங்கிலினன், துணைத் தலைமை ஆணையாளர் எம்.எஃப்.எஸ். முஹீத், சர்வதேச ஆணையாளர் டொக்டர் அசங்க ஆரியவா மற்றும் தெற்காசிய நாடுகளைச் சேர்ந்த பல தலைமை சாரணர் ஆணையாளர் மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 713928

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time