இலங்கை மாணவர்கள் 30 பேருக்கு; சீனா அரசு புலமைப்பரிசு.!!!
2025/2026 கல்வியாண்டிற்காக, சீன அரசு முதுகலை மற்றும் முனைவர் பட்டதாரிகளுக்கான புலமைப்பரிசில் உதவித்தொகையை இலங்கையின் 30 மாணவர்களுக்கு வழங்கியுள்ளது. கொழும்பில் உள்ள சீன தூதரகத்தில் நடந்த அதிகாரப்பூர்வ விழாவில், கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் மதுரா செனவிரத்ன இந்த உதவித்தொகைகளை கையளிக்கும் போது உரையாற்றினார்.
கல்வி அமைச்சின் தகவல்படி, 2025 ஆம் ஆண்டு நிலவரப்படி, 165 க்கும் மேற்பட்ட இலங்கை மாணவர்கள் இந்த புலமைப்பரிசு திட்டத்தின் மூலம் பயனடைந்துள்ளனர். இந்த உதவித்தொகைகள் பொறியியல், தொழில்நுட்பம், மருத்துவம், விவசாயம், கல்வி, முகாமைத்துவம் மற்றும் கலை போன்ற துறைகளில் பயிற்சி பெறும் மாணவர்களுக்கு வழங்கப்படுகின்றன.