இலங்கையில் 300 பொலிஸார்; 2025 ஜனவரி மாதம் முதல் – பல்வேறு குற்றங்கள் காரணமாக இடைநீக்கம்.!!!
2025 ஜனவரி மாதம் முதல் பல்வேறு குற்றங்கள் காரணமாக சுமார் 300 பொலிஸ் அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
2024 ஆம் ஆண்டில் சுமார் 200 பொலிஸார் இடைநீக்கம் செய்யப்பட்டிருந்தாலும், இந்த ஆண்டு அந்த எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது என்று பொது பாதுகாப்பு அமைச்சர் குறிப்பிட்டார்.
இந்தநிலையில் சில அரசு ஊழியர்களின் செயல்களால், முழு அரசு சேவையின் நற்பெயருக்கும் களங்கம் ஏற்பட்டுள்ளது என்று அமைச்சர் கூறியுள்ளார்.
இதற்கிடையில், பல்வேறு குற்றங்களைச் செய்ததாக நிரூபிக்கப்பட்ட நிலையில், சில தொழிலாளர்கள் 25 ஆண்டுகளாக அரசு சேவையில் பணியாற்றிய போதிலும், மாதாந்த ஓய்வூதியக் கொடுப்பனவுகளை இழந்துள்ளனர் என்று அவர் கூறியுள்ளார்.