உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

இலங்கை போக்குவரத்து சபையில்; சாரதிகள் மற்றும் நடத்துனர்களுக்கான ஆட்சேர்ப்பு.!!!

இலங்கை போக்குவரத்து சபை (SLTB) ஒப்பந்த அடிப்படையில் சாரதிகள் மற்றும் நடத்துனர்களை ஆட்சேர்ப்பு செய்வதாக அறிவித்துள்ளது!

நீங்கள் பொதுப் போக்குவரத்துத் துறையில் பணியாற்ற ஆர்வமாக இருந்தால், இது உங்களுக்கான அருமையான வாய்ப்பு!

நாடு முழுவதும் உள்ள 107 டிப்போக்களில் 25,000க்கும் மேற்பட்ட ஊழியர்களுடன் இயங்கி வரும் எமது பொதுப் போக்குவரத்து சேவையை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தற்போதைய வெற்றிடங்கள்:
* சாரதி பதவி: 450 வெற்றிடங்கள் (ஆண்களுக்கு 425, பெண்களுக்கு 25)
* நடத்துனர் பதவி: 300 வெற்றிடங்கள் (ஆண்களுக்கு 275, பெண்களுக்கு 25)

முக்கிய தகவல்கள்:
* விண்ணப்பங்களுக்கான கடைசித் தேதி: ஜூலை 31, 2025
* விண்ணப்பிக்கும் பதவி மற்றும் சம்பந்தப்பட்ட மாகாணம் என்பன உறையின் மேல் இடது மூலையில் தெளிவாகக் குறிப்பிடப்பட வேண்டும்.
* நேர்முகப் பரீட்சையின் போது உங்களது அசல் பாடசாலை விடுப்புச் சான்றிதழ் (மாணவர் முன்னேற்ற அறிக்கை) மற்றும் பிற கல்விச் சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும்.
* முழுமையற்ற அல்லது விதிகளைப் பூர்த்தி செய்யாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என இலங்கை போக்குவரத்து சபை வலியுறுத்தியுள்ளது.

Related News

Total Websites Views

Total Views: 263264

Search

விளம்பரங்கள்