உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

March 17, 2026

Hot News

15.03
விளம்பர மோகத்தில்: தடுமாறும் மக்கள்.!!!
IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!

வாழைச்சேனை பிரதேச சபையின் தவிசாளரை – கைது செய்ய நடவடிக்கை.!!!

மட்டக்களப்பு – வாழைச்சேனை பிரதேச சபையின் தவிசாளரை கைது செய்ய நான்கு காவல்துறை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு – வாழைச்சேனை பகுதியில் தொல்லியல் இடங்களை அடையாளப்படுத்தி நாட்டப்பட்ட பெயர் பலகைகளை அகற்றிய சம்பவம் தொடர்பிலேயே அவர் கைது செய்யப்படவிருப்பதாகக் குறிப்பிடப்படுகிறது.

குறித்த பெயர்ப்பலகைகள், வாழைச்சேனை பிரதேச சபையின் அங்கீகாரம் இல்லாமல் நிறுவப்பட்டதாகக் கூறி, அவை அகற்றப்பட்டிருந்தன.

இது தொடர்பில், 7 பேர் சந்தேக நபர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக காவல்துறை கூறுகிறது.

இதேநேரம், மட்டக்களப்பு, கிரான் பகுதியில் வைத்து ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டதாகவும் காவல்துறை தெரிவித்துள்ளது.

முன்னதாக, குடும்பிமலை, கல்லடி வெட்டை, பெண்டுகள் சேனை, முருங்கன் தீவு, முறுத்தானை ஆகிய இடங்களிலிருந்தே தொல்லியல் பெயர்ப்பலகைகள் அகற்றப்பட்டிருந்தன.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 706037

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time