உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

15.03
விளம்பர மோகத்தில்: தடுமாறும் மக்கள்.!!!
IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!

போலி தகவல்களால் எரிபொருள் விநியோகத்தைத் தடுக்க முயற்சித்தால் கடும் நடவடிக்கை – அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ எச்சரிக்கை.!!!

நாட்டில் எரிபொருள் விநியோகத்தைத் தடுக்கும் வகையில் தவறான தகவல்கள் மற்றும் போலிப் பிரசாரங்களை பரப்புவோருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

பொதுமக்களுக்கு அமைதியான மற்றும் ஒழுங்கான முறையில் எரிபொருள் விநியோகம் நடைபெறுவதை பாதிக்க முயற்சிப்போர் அல்லது குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கில் சமூக ஊடகங்கள் உள்ளிட்ட தளங்களில் போலி தகவல்கள் (Fake News) பரப்புவோர் மீது சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அவர் எச்சரித்தார்.

மேலும் தற்போதைய உலகளாவிய சூழ்நிலையை கருத்தில் கொண்டு, எரிபொருள் விநியோகத்தை சீராக முன்னெடுக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.

எரிபொருள் விநியோகத்தை முறையாகவும் ஒழுங்காகவும் நிர்வகிக்க அரசாங்கத்திற்கு மக்கள் முழுமையான ஆதரவை வழங்க வேண்டும் எனவும் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ இதன்போது விசேட கோரிக்கை விடுத்துள்ளார்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 705117

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time