உணவுப் பொருட்களை பதுக்கி வைப்பவர்களுக்கு எதிராக: கடுமையான சட்ட நடவடிக்கை — நுகர்வோர் விவகார அதிகாரசபை எச்சரிக்கை.!!!
நாட்டில் நிலவும் அனர்த்த நிலைமை காரணமாக, சிலர் அதிகளவில் பொருட்களைப் பதுக்கி வைத்திருப்பதாகவும், இதனால் தேவையற்ற பீதியை உருவாக்கத் தேவையில்லை என்றும் நுகர்வோர் விவகாரங்கள் அதிகாரசபை அறிவித்துள்ளது.
அந்தவகையில் பொதுமக்கள் அநாவசியமாக அதிகளவில் பொருட்களை வாங்குவதைத் தவிர்க்குமாறும், உண்மையில் தேவைப்படும் அளவுக்கு மட்டும் பொருட்களை வாங்குமாறும், தேவையற்ற பதட்டம் அல்லது பீதியை ஏற்படுத்த வேண்டாம் எனவும் கேட்டுள்ளது.
பல்பொருள் அங்காடி வர்த்தகர்கள் நுகர்வோருக்குத் தேவையான அளவு பொருட்களை மட்டுமே வழங்குவதோடு, பொருட்கள் கட்டுப்படுத்தப்பட்ட முறையில் விநியோகிக்கப்பட வேண்டும் எனவும், அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் ஒத்துழைப்பு அளிக்கும் வகையில்,
நிலவும் மற்றும் நியாயமான விலையில் பொருட்களை விற்க வேண்டும்.
அநியாய விலை உயர்வுகள் மற்றும் பதுக்கல் செயற்பாடுகளை தடுப்பதற்காக நாடு முழுவதும்
சிறப்பு கண்காணிப்புகள் மற்றும் சோதனைகள் நடத்தப்படும் என அதிகாரசபை தெரிவித்துள்ளது.
பொதுமக்கள் பொருட்கள் அதிக விலையில் விற்கப்படுவதை கண்டால்,
உடனடியாக நுகர்வோர் விவகார அதிகாரசபைக்கு புகார் செய்ய வேண்டும். அத்தோடு நன்கொடை சேகரிப்பதன் பெயரில் வீடுகளுக்கு வரும்
அறியப்படாத நபர்களிடம் எச்சரிக்கையுடன் இருக்கவும் கேட்டுள்ளது.
பொருட்களின் நியாயமான விற்பனை மற்றும் விநியோகத்தை அதிகாரிகள் நெருக்கமாக கண்காணிப்பார்கள்.
இணங்கத் தவறும் வர்த்தகர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நுகர்வோர் விவகார அதிகாரசபை எச்சரித்துள்ளது.