மாணவர்களின் அன்றாட உணவுப்பழக்க வழக்கங்கள்; கல்வியில் தாக்கம் செலுத்துகின்றது – வைத்திய கலாநிதி றிபாஸ்.!!!
காத்தான்குடி நாஸ் கெம்பஸ் ஏற்பாட்டில் சமூக நேய செயற் திட்டத்தினூடாக ஏற்பாடு செய்யப்பட்ட புலமை பரிசில் பரீட்சை எழுதும் மாணவர்களும் பெற்றோர்களுக்குமான இலவச கருத்தரங்கு காத்தான்குடி மீராபாலிகா மகா வித்தியாலய பிரதான மண்டபத்தில் நேற்று (05) மாலை இடம் பெற்றது.
காத்தான்குடி நாஸ் கெம்பஸின் நிறுவுனரும் சிரேஸ்ட ஆலோசகருமான வைத்திய கலாநிதி ஐ.எல். றிபாஸ் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் புலமை பரீட்சை யுத்திகளும் அதனை எவ்வாறு எதிர்கொள்வதும் எனும் தலைப்பில் திருக்கோவில் வலயக்கல்வி அலுவலகத்தின் பிரதிக் கல்விப்பணிப்பாளர் எஸ். அம்ஜத் காண் விரிவுரையினை வழங்கியதுடன் மாணவர்களும் உளவியலும் எனும் தலைப்பில் உளவியலாளர் அஸ்ராக் இஸ்மாயில் விரிவுரையாற்றியதுடன் மாணவர்களின் உணவுப் பழக்க வழக்கங்கள் தொடர்பில் வைத்திய கலாநிதி ஐ.எல். றிபாஸ் பங்கேற்று விரிவுரைகளை நடாத்தினர்.
இந் நிகழ்வில் காத்தான்குடி கல்விக்கோட்டத்திற்குற்பட்ட இம்முறை புலமை பரிசில் பரீட்சைக்குத்தோற்றும் மாணவர்களும் அவர்களின் பெற்றோர்களும் அதிகளவில் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.