உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

ஸுஹைலை பிணையில் விடுவிக்குமாறு – நீதிவான் உத்தரவு.!!!

இன்று (15) ஸுஹைலின் பயங்கரவாதத் தடைச்சட்ட வழக்கு கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

வழக்கு விசாரணையின் போது ஸுஹைல் திறந்த நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கு விசாரணையின் போது பொலிஸ் தரப்பு சார்பாக தெஹிவளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி (OIC) அநுராத ஹேரத், ஸுஹைலை பிணையில் விடுவிக்குமாறு நீதவானைக் கோரும் சட்டமா அதிபரின் ஆலோசனையை நீதவானிடம் சமர்ப்பித்தார்.

அதனை கருத்திற்கொண்ட கல்கிஸ்ஸை நீதிவான், ஸுஹைலை பிணையில் விடுவிக்குமாறு பொலிஸாரினை பணித்தார்.

இவ்வழக்கில் ஸுஹைல் சார்பாக சிரேஷ்ட சட்டத்தரணி கீத்ம பர்னாந்து, சட்டத்தரணிகள் இல்ஹாம் ஹஸனலி, அஷ்ரப் முக்தார் மற்றும் பெஹ்ஷாத் ஆகியோர் ஆஜராகியிருந்தனர்.

Related News

Total Websites Views

Total Views: 258979

Search

விளம்பரங்கள்