உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

15.03
விளம்பர மோகத்தில்: தடுமாறும் மக்கள்.!!!
IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!

சந்தேகத்திற்கிடமான விமானம் தாழ்வாக பறந்ததால் மக்கள் அச்சம் – காரணத்தை வெளிப்படுத்திய பொலிஸார்.!!!

(கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்)

ஆராச்சிகட்டு – நல்லதரண்கடுவ பகுதியில் நேற்று இரவு வேளையில் சந்தேகத்திற்கிடமான முறையில்  விமானம் ஒன்று, பல முறை தாழ்வாக பறந்ததாக பிரதேச மக்கள் பொலிஸ் அவசர பிரிவுக்கு முறைப்பாடு செய்துள்ளனர்.

நேற்று (04) சனிக்கிழமை இரவு குறித்த விமானம் மிகவும் தாழ்வாகவும், மக்களை அச்சுறுத்தும் வகையிலும் பறந்ததாக பிரதேசவாசிகள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.

விமானத்தின் சக்கரங்களை கண்களால் காண முடிந்ததாகவும், குறித்த விமானத்தில் இருந்து ஒருவகையான வெளிச்சம் வெளிப்பட்டதாகவும் தெரிவித்த மக்கள், குறித்த விமானம் ஏதேனும் ஆபத்தில் சிக்கி இருக்கலாம் என நினைத்து பொலிஸ் அவசர பிரிவுக்கு முறைப்பாடு செய்ததாக தெரிவித்தனர்.

விடயம் குறித்து விசாரணை நடத்திய பொலிஸ் பிரிவு, நேற்றைய தினம் ஏற்பட்ட மழையினால் கட்டுநாயக்க விமான நிலையம் நீரில் மூழ்கி இருந்ததாகவும், அதனால் குறித்த விமானம் தரை இறங்க முடியாமையால் சிறுது நேரம் வானில் பறந்ததாகவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 709417

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time