உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

15.03
விளம்பர மோகத்தில்: தடுமாறும் மக்கள்.!!!
IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!

மட்டக்களப்பு மாவட்டத்தின் புதிய உதவி பொலிஸ் மா அதிபர் – டபிள்யூ.யு.டி. கினிகே இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.!!!

மட்டக்களப்பு மாவட்டத்தின் புதிய உதவி பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்ட டபிள்யூ.யு.டி. கினிகே, இன்று செவ்வாய்க்கிழமை (07) தனது கடமைகளை சம்பிரதாயபூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டார்.

முன்னதாக இப்பதவியை வகித்த எம்.என்.எஸ். நுவான்மெண்டிஸ் இடமாற்றம் பெற்றதையடுத்து, ஏற்பட்ட வெற்றிடத்துக்காக டபிள்யூ.யு.டி. கினிகே நியமிக்கப்பட்டார்.

பொறுப்பேற்பு நிகழ்வு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லலித் லீலாரத்ன தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் மாவட்டத்திலுள்ள 15 பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

இவ்வேளையில் புதிய உதவி பொலிஸ் மா அதிபருக்கு பொலிஸ் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டதுடன், சர்வ மத குருமார்களின் ஆசீர்வாதத்துடன் அவர் தனது கடமைகளை அதிகாரப்பூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 709412

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time