உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

March 17, 2026

Hot News

15.03
விளம்பர மோகத்தில்: தடுமாறும் மக்கள்.!!!
IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!

நடு வீதியில் போட்டி போட்டு ஓடிய 3 பேரூந்துகள்; ஒன்றுடன் ஓன்று மோதியதில் விபத்து – மாணவர்கள் உட்பட பலர் காயம்.!!!

பலாங்கொடை மாதொல சந்தியில் 3 பஸ் வண்டிகள் ஒன்றுடன் ஒன்று உரசி மோதியதால் இன்று (11) காலை ஏற்பட்ட விபத்தில் பாடசாலை மாணவர்கள் உட்பட பலர் காயமடைந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவ்வழியாக வந்த அம்பியூலன்ஸ் மற்றும் வாகனங்களில் காயமடைந்த 12 மாணவர்கள் மற்றும் பொதுப் பயணிகள் வைத்தியசாலைகளுக்கு கொண்டு செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் எவருக்கும் ஆபத்தான காயங்கள் இல்லையென பொலிஸார் தெரிவித்தனர்.

பெல்மதுளை முதல் பலாங்கொடை நோக்கிச் சென்ற இபோச பஸ் எதிர்ப்பக்கமாக வந்த இபோச மற்றும் தனியார் பஸ்களுடன் மோதி இந்த விபத்து ஏற்பட்டுள்ளது .

மாணவர்கள் பாடசாலை செல்லும் நேரத்தில் இவ்வீதியில் பயணிகள் பஸ்கள் இடையே கடும் போட்டி இட ம் பெறுவதாகவும், இதனால் மாணவர்கள் உட்பட பயணிகள் பொதுமக்கள் பெரும் அசெளகரியத்துக்கு உட்படுவதாவும் பெற்றோர் தெரிவிக்கின்றனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 706216

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time