இளம் அரசியல் தலைவர்களுக்கான செயலமர்வில் பங்கேற்க; சீனாவுக்கு புறப்பட்டார் – சட்டத்தரணி ஹபீப் றிபான்.!!!
சீன தூதரகத்தினால் இலங்கையில் தெரிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகளின் இளம் தலைவர்களுக்கான செயலமர்வில் பங்கேற்க, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அபிவிருத்திக்கான செயற்றிட்ட பணிப்பாளரும் கல்குடா தொகுதி அமைப்பாளருமான சட்டத்தரணி ஹபீப் றிபான் இன்று (15) சீனாவுக்குப் பயணமானார்.
இந்நிகழ்வில் பங்கேற்பதற்காக இளைஞர் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் பொத்துவில் பிரதேச சபை தவிசாளருமான முதுநபீன் முஷாரப் ஏற்கனவே சீனாவுக்குப் பயணமானார்.
இந்த வாய்ப்பை வழங்கிய கட்சியின் தேசிய தலைவர், சட்ட முதுமானி கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம், கட்சியின் பிரதி தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், கட்சியின் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி நிசாம் காரியப்பர், கட்சியின் பொருளாளர் றஹ்மத் மன்சூர் ஆகியோருக்கு சட்டத்தரணி ஹபீப் றிபான் தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்தார்.