உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

15.03
விளம்பர மோகத்தில்: தடுமாறும் மக்கள்.!!!
IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!

காத்தான்குடியில் பாரம்பரிய உணவு வகைகளின் கண்காட்சி.!!!

(எம்.ரி.எம்.யூனுஸ்)

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களமும், காத்தான்குடி பிரதேச செயலகமும் இணைந்து ஏற்பாடு செய்த “பாரம்பரிய உணவு வகைகளின் கண்காட்சி – 2025” நிகழ்வு இன்று (30) காத்தான்குடி கடற்கரை பகுதியில் அமைந்துள்ள தாருல் அர்க்கம் வளாகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் காத்தான்குடி பிரதேச கலாச்சார உத்தியோகத்தர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம். ஜவாஹிர் பலாஹி அவர்களின் நெறிப்படுத்தலிலும், காத்தான்குடி பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் எம்.எஸ். சில்மியா அவர்களின் தலைமையிலும் ஆரம்ப நிகழ்வு இடம்பெற்றது.

இக்கண்காட்சியில் பாரம்பரிய உணவு வகைகள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளதோடு, விற்பனையும் இடம்பெற்று வருகின்றது. இந்த பாரம்பரிய உணவுக் கண்காட்சியைப் பார்வையிட பாடசாலை மாணவர்கள், பாலர் பாடசாலை மாணவர்கள், பொதுமக்கள் என பலரும் சமூகமளித்திருந்தனர்

இன்று வியாழக்கிழமை (30) ஆரம்பமான இக்கண்காட்சியானது நாளை வெள்ளிக்கிழமை (31) மாலையுடன் நிறைவு பெறவுள்ளது. காத்தான்குடியின் சுற்றுலாத்துறையை மேம்படுத்தவும், பாரம்பரிய உணவு கலாச்சாரத்தை ஊக்குவிக்கவும், ஆரோக்கியமான உணவுப் பழக்கவழக்கங்களை உருவாக்கவும், இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் காத்தான்குடி பிரதேச செயலாளர் நிஹாரா மெளஜூத் மற்றும் காத்தான்குடி நகர சபை செயலாளர் றினோஸா முப்லிஹ், பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் தனூஜா, நிருவாக உத்தியோகத்தர் எம்.எஸ்.எம் றஊப் , நிருவாக கிராம உத்தியோகத்தர் எம்.எம்.எம்.ஜறூப், சமுர்த்தி தலைமையக முகாமையாளர் பத்மா ஜெயராஜ், சமுர்த்தி வங்கி முகாமையார்களான எம்.ஏ.சுல்மி, எஸ்.எச்.எம்.முஸம்மில் உட்பட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் . பாடசாலைகளின் அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 708113

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time