பாதுகாப்பற்ற புகையிரதக் கடவையில் விபத்து – இரு பிள்ளைகளின் தந்தை பலி.!!!
(ஏறாவூர் நஸீர்)
நாட்டில் 1400 க்கும் மேற்பட்ட புகையிரத கடவைகள் இருந்தும் 400 க்கும் மேற்பட்ட கடவைகள் பாதுகாப்பற்றதாகவே காணப்படுகிறது.
அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டத்திலும் பல்வேறு இடங்களிலும் பாதுகாப்பற்ற புகையிரத கடவைகளே காட்சி தருவதை காணக்கூடியதாயிருக்கிறது.
அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்ட, வந்தாறுமூலை புகையிரத நிலையத்துக்கு அண்மையிலுள்ள களுவங்கேணி வீதிக்கான பாதுகாப்பு கடவையில் கடமையாற்றியவர் கடந்ந 04 நாட்களாக கடமைக்கு சமூகமளிக்கவில்லையென்றும் , கடமையிலிருந்து விலகிக்கொள்வதாக 04 நாட்களுக்கு முன்னரே சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு தான் அறிவித்து விட்டேன் என்றும், அவர் தெரிவித்ததாக பொதுமக்கள் தெரிவித்தனர்.
இதனால் இன்று (02) காலை 06.10 மணியளவில் மட்டக்களப்பிலிருந்து கொழும்பு செல்ல வெளியாகிய புகையிரத்தில் குறித்த பாதுகாப்பற்ற கடவையில் வைத்து, மோட்டார் சைக்கிளில் பயணித்த இளம் குடும்பஸ்தரான இரு பிள்ளைகளின் தந்தையான சங்கரலிங்கம் சுரேந்திரன் என்பவர் மோதுண்டு மரணமான சம்பவம் பதிவாகியுள்ளது.



