உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

15.03
விளம்பர மோகத்தில்: தடுமாறும் மக்கள்.!!!
IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!

காத்தான்குடி பிரதேச செயலகத்தில்; பிணக்குத் தீர்த்தல் பொறிமுறை தொடர்பான பயிற்சி.!!!

(எம் எஸ் எம் நூர்தீன்)

காத்தான்குடி பிரதேச செயலகத்தில் பிணக்குத் தீர்த்தல் பொறிமுறை தொடரபான பயிற்சி செயலமர்வொன்று இன்று (08) காத்தான்குடி பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

காத்தான்குடி பிரதேச செயலாளர் திருமதி நிஹாறா மௌஜுத் அவர்களின் வழிகாட்டலிலும் தலைமையிலும் மத்தியஸ்த சபை அபிவிருத்தி உத்தியோகத்தர் மௌலவி ஹஸ்புல்லாஹ் அவர்களின் ஒருங்கிணைப்பில் இந்தப் பயிற்சி செயலமர்வு இடம் பெற்றது.

இதில் காத்தான்குடி பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள ஜும்ஆப் பள்ளிவாயல்களின் பிரதி நிதிகள், சிவில் சமூக அமைப்புக்களின் பிரதி நிதிகள், காத்தான்குடி பிரதேச மத்தியஸத்த சபை உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

செயலமர்வை மட்டக்களப்பு மத்தியஸ்த சபை பயிற்றுவிப்பாளர் ஆசாத் நடாத்தினார்.

காத்தான்குடி பிரதேசம் மக்கள் அதிகமாக செறிந்து வாழும் நகரமாகவும், பொருளாதார நடவடிக்கைகள் கூடுதலாக இடம் பெறும் பகுதியாகவும் விளங்குவதால், குடும்ப பிணக்குகள் கொடுக்கல் வாங்கல் பிணக்ககள் மற்றும் சிவில் பிணக்குகள் அதிகமாக பதிவாகி வருகின்றன. இப் பிணக்குகளை இப் பிரதேசத்திலுள்ள மத்தியஸ்த சபை, ஜும்ஆப் பள்ளிவாயல்கள் மற்றும் சில சிவில் சமூக அமைப்புகள் மூலம் கையாளப்பட்டு வருகின்றது என்பது பாராட்டத்தக்கதாகும்.

அண்மைக்காலமாக காழி நீதிமன்றத்திலிருந்தும், பொது மக்களிடமிருந்தும் அதிகமான பிணக்குகள் ஆற்றுப்படுத்துவதை அவதானிக்க முடிகிறது. இப்பிணக்குகளை வெற்றிகரமாக கையாளுவதற்கும், பிணக்குத் தீர்த்தல் பொறிமுறைகளை மேலும் மேம்படுத்துவதற்கு முறன்பாட்டு முகாமைத்துவம் தொடர்பான நவீன நுட்பங்களை பகிர்ந்து கொள்வதற்குமான ஒரு பயிற்சி செயலமர்வாக இந்த பயிற்சி நெறி நடாத்தப்பட்டதாக திருமதி நிஹாறா மௌஜுத் தெரிவித்தார்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 709495

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time