ஐக்கிய மக்கள் சக்தி இளைஞர் பிரதிநிதிகளுக்கான பயிற்சிப் பட்டறை; புதிய நிறைவேற்றுக் குழு நியமனம்.!!!
ஐக்கிய மக்கள் சக்தி (சமகி ஜன பலவேகய – SJB) கட்சியின் தலைமையகத்தில், உள்ளூராட்சி மன்றங்களில் அங்கம் வகிக்கும் இளம் ஆண் மற்றும் பெண் பிரதிநிதிகளுக்கான விசேட பயிற்சிப் பட்டறை அண்மையில் (09) இடம்பெற்றது.
இந்நிகழ்வில் எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச அவர்கள் தலைமையில் இடம்பெற்றது.
இளைஞர்களின் அரசியல் பங்களிப்பை வலுப்படுத்தி, நாட்டின் எதிர்கால தலைமைத்துவத்தை உருவாக்கும் நோக்கத்துடன் இந்தப் பட்டறை ஏற்பாடு செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிகழ்வு, கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலின் கீழ் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது.
இதற்கமைவாக, சமகி இளைஞர் சக்தியின் (Samagi Tharuna Balawegaya – STB) எதிர்கால நடவடிக்கைகள் மற்றும் வேலைத்திட்டங்களை வினைத்திறனுடன் நடைமுறைப்படுத்துவதற்காக புதிய நிறைவேற்றுக் குழு நியமிக்கப்பட்டது.
அந்தக் குழுவின் தலைவராக கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் பிரசாத் சிறிவர்தன அவர்கள் நியமிக்கப்பட்டார்.
இந்நிகழ்வில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த இளம் உள்ளூராட்சி பிரதிநிதிகள், கட்சியின் உயரதிகாரிகள் மற்றும் இளைஞர் பிரிவு உறுப்பினர்கள் பெருமளவில் பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.









