22 வருட காலமாக தீர்க்கப்படாத பிரச்சனைக்கு – தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் தீர்வு.!!!
(ஜே.கே)
கடந்த 22 ஆண்டுகளுக்கு மேலாக நிலவிய பாரிய வெள்ள நீர் பிரச்சினைக்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஊடாக தீர்வு காணப்பட்டுள்ளது
மட்டக்களப்பு மத்திய கல்வி வலயத்திற்குட்பட்ட காத்தான்குடி அஷ் ஷுஹதா வித்தியாலயத்திற்கு முன்னால் செல்லுகின்ற தோணாவினால் மழைக்காலத்தில் பாரியளவிலான வெள்ள நீர் பிரச்சினை ஏற்பட்டு பாடசாலைக்குள்ளும் வெள்ள நீர் புகுந்து சில தினங்கள் வெள்ளம் வடிகின்ற வரை பாடசாலையை மூடுகின்ற நிலைக்கு பெரும் பிரச்சினைகடந்த 22 ஆண்டு காலமாக இருந்து வந்துள்ளது .
குறித்த வெள்ள நீர்ப்பிரச்சினையை தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் பிரதிநிதிகளிடம் பாடசாலை நிர்வாகம் தெரிவித்ததையடுத்து தற்போது ஆறு மில்லியன் ரூபாய் செலவில் குறித்த தோணாவிலிருந்து வெள்ளநீர் வடிந்தோடாமல் தடுப்பு சுவர் அமைக்கப்பட்டிருக்கிறது .
இதனால் பாடசாலை செல்லுகின்ற பிரதான வீதி மற்றும் பாடசாலையிலுள் வெள்ளநீர் புகுந்து மாணவர்கள் படும் சிரத்தை இல்லாமல் ஆக்கச்செய்யப்பட்டுள்ளது.
குறித்த தோணா தடுப்புச் சுவர் அமைக்கும் பணிகளை மட்டக்களப்பு மாவட்ட தேசிய மக்கள் சக்தி ஒருங்கிணைப்பாளர் எம் பி எம் ஃபிர்தௌஸ் நளுமி மற்றும் காத்தான்குடி தேசிய மக்கள் கட்சி அமைப்பாளர் எ எம்எஸ்எம் நசீர் ஆகியோர் நேரில் சென்று பார்வையிட்டனர்.
இது குறித்து தேசிய மக்கள் சக்தி மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் எம் பி எம் ஃபிர்தௌஸ் நளீமி கருத்தை தெரிவித்தார்.
இதன் மூலம் குறித்த பாடசாலையில் கல்வி பயிலும் பல நூறு மாணவர்கள் பெரும் நன்மையடைந்துள்ளனர்.