உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

15.03
விளம்பர மோகத்தில்: தடுமாறும் மக்கள்.!!!
IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!

ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் மேலும் இரண்டு மனிதாபிமான விமானங்கள் இலங்கை வருகை – அவசர மீட்பு உதவிகள் ஒப்படைப்பு.!!!

நாட்டில் தற்பொழுது முன்னெடுக்கப்படும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதற்காக ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் (UAE) இரண்டு மனிதாபிமான உதவி விமானங்கள் நேற்று இரவு (02) இலங்கையை வந்தடைந்தன.

C-17 விமானங்களில் இரண்டு மீட்புப் படகுகள், தேடுதல் பணிகளில் ஈடுபடுத்தப்படும் நான்கு K9 வகை நாய்கள், டபிள் கெப் மற்றும் SUV உள்ளிட்ட மீட்பு வாகனங்கள், லொரிகள் மற்றும் 53 பணியாளர்களைக் கொண்ட விசேட நகர்ப்புற தேடுதல் மற்றும் மீட்புக் (USAR) குழு உள்ளிட்ட அத்தியாவசிய அனர்த்த மீட்பு உபகரணங்கள் எடுத்து வரப்பட்டுள்ளன.

கொழும்பிற்கான ஐக்கிய அரபு இராஜ்ஜிய தூதுவர் கௌரவ கலீத் நாசர் அல்அமேரி (H.E. Khaled Nasser AlAmeri) மற்றும் ஐக்கிய அரபு இராஜ்ஜிய நிவாரணக் குழுவின் தலைவர் கலாநிதி ஹமூத் அலபாரி (Dr. Hamood Alafari) ஆகியோரால் இந்த உதவிப் பொருள் இலங்கை அதிகாரிகளிடம் உத்தியோகபூர்வமாக ஒப்படைக்கப்பட்டன.

இலங்கை அரசாங்கத்தின் சார்பாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் மத்திய கிழக்குப் பிரிவின் பிரதிப் பணிப்பாளர்களான இஷாரா டி சில்வா மற்றும் தினுஷிகா தசநாயக்க ஆகியோர் இந்த நிவாரணப் பொருட்களைப் பொறுப்பேற்றனர்.

இந்த நெருக்கடியான நேரத்தில் ஐக்கிய அரபு இராஜ்ஜியம் வழங்கிய அவசர ஆதரவிற்கு இலங்கை அரசாங்கம் நன்றி தெரிவித்துள்ளது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 713707

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time