காத்தான்குடி பிரதேச செயலக ஏற்பாட்டில் இடம்பெற்ற; சர்வதேச முதியோர் தின விழா.!!!
(எம்.எஸ்.எம். சஜீ)
காத்தான்குடி பிரதேச செயலாளர் நிஹாரா மெளஜூத் அவர்களின் வழிகாட்டலில் காத்தான்குடி பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் லயன்ஸ் காத்தான்குடி கிளையின் அனுசரனையுடன் சர்வதேச முதியோர் தின நிகழ்வு நேற்று (02) புதிய காத்தான்குடி பதுறியா பள்ளிவாயலில் இடம்பெற்றது.
காத்தான்குடி பிரதேச செயலகத்தின் சமூக சேவை உத்தியோகத்தர் எஸ்.ஏ.சீ. நஜிமுதீன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் புதிய காத்தான்குடி பெரிய ஜூம்ஆ பள்ளியின் பிரதம இமாம் அஸ்-ஸெய்க் எம்.எம்.எம். இல்ஹாம் பலாஹி விஷேட ஆன்மீக உரையை நிகழ்த்தினார்.
இந்நிகழ்வில் காத்தான்குடி பிரதேச செயலகத்திற்குட்பட்ட பல முதியவர்கள், பள்ளிவாயல் நிர்வாகிகள், மகல்லாவாசிகள் ஊர்ப்பிரமுகர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.



