உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

Print
சமூக ஊடக உலகில் பெண்கள்: வாய்ப்புகளும் அதிகரிக்கும் சவால்களும்.!!!
Print
மக்கள் ஒத்துழைப்பே பாதுகாப்பின் அடித்தளம்.!!!

Share :

விவசாயிகளுக்கு தடையற்ற உர விநியோகம் உறுதி செய்யப்படும் – ஜனாதிபதி.!!!

விவசாயிகளுக்கு தடையின்றி உரங்களை வழங்குவதை உறுதி செய்வதே அரசாங்கத்தின் முதன்மையான நோக்கமாகும் என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழ்நிலைக்கிடையிலும், நாட்டின் விவசாய நடவடிக்கைகள் பாதிக்கப்படாத வகையில் உரங்களை தொடர்ச்சியாக வழங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அவர் அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினார்.

இன்று (02) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சு மற்றும் தொடர்புடைய நிறுவனங்களின் சிரேஷ்ட அதிகாரிகளுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார்.

தற்போதைய உரக் கையிருப்பு நிலைமை மற்றும் விநியோகப் பொறிமுறை குறித்து கவனம் செலுத்திய ஜனாதிபதி, மாவட்ட ரீதியாக விவசாயிகளுக்கு உரங்களை முறையான முகாமைத்துவத்துடன் விநியோகிப்பதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டினார்.

மேலும், இத்தகைய நெருக்கடி நிலைகளின் போது சில வர்த்தகர்கள் உரங்களை மறைத்து வைப்பதையும் அதிக விலைக்கு விற்பனை செய்வதையும் தடுக்கும் வகையில் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டது.

மறைத்து வைக்கப்பட்டிருந்து கைப்பற்றப்பட்ட உரங்களில் ஒரு பகுதி விவசாயத் திணைக்களத்தினால் விவசாய அபிவிருத்தித் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தற்போதைய சூழ்நிலையை கருத்திற்கொண்டு உரங்களை பாதுகாப்புக் கையிருப்பாக வைத்திருப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

அதேவேளை, யுத்த சூழ்நிலை நிலவாத நாடுகளுடன் கலந்துரையாடி மாற்று வழிமுறைகள் மூலம் உரங்களை இறக்குமதி செய்வதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் இக்கலந்துரையாடலில் ஆராயப்பட்டது.

இந்தக் கலந்துரையாடலில் கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் கே.டி. லால்காந்த, அமைச்சின் செயலாளர் டி.பி. விக்ரமசிங்க, ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் கபில ஜனக பண்டார, அரச உர நிறுவனத்தின் தலைவர் டி.சி.டபிள்யூ. சேதுகே, விவசாய அபிவிருத்தித் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம், தேசிய உர செயலகத்தின் பணிப்பாளர் சந்தன லொக்குஹேவகே உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் உர இறக்குமதி நிறுவனங்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 737616

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time