உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

15.03
விளம்பர மோகத்தில்: தடுமாறும் மக்கள்.!!!
IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!

மாதாந்த கொடுப்பனவை பாடசாலைக்கு கொடுத்த – காத்தான்குடி நகர சபை உறுப்பினர் றுஸ்வின்.!!!

காத்தான்குடியின் மிகப் பழைமை வாய்ந்த மட்/மம/அந்நாஸர் வித்தியாலயத்தின் கணினி ஆய்வுகூடத்திற்கான இணைய வசதியைப் பெற நேற்று (10) நிதி உதவி வழங்கப்பட்டது.

நீண்டகாலமாக இணைய இணைப்பு துண்டிக்கப்பட்டிருந்த நிலையில், 50-க்கும் மேற்பட்ட கணினிகள் மற்றும் ஸ்மார்ட் தொழில்நுட்ப திரை (Smart Board) போன்ற வளங்களை மாணவர்கள் பயன்படுத்த முடியாமல் இருந்தனர்.

குறிப்பாக தொழில்நுட்பக் கல்வி (சா.த) பாடத்தை பயிலும் மாணவர்கள், இணைய வசதி இன்றி பாடங்களை முழுமையாக கற்க முடியாத சூழ்நிலையில் இருந்னர்.

இந்த அவசரத் தேவையை பள்ளி அதிபர் ஏ.எம். அப்துர் ரஹ்மான் அவர்கள் ஊடாக அறிந்த காத்தான்குடி நகர சபை உறுப்பினர் ஈ.எம். றுஸ்வின் அவர்கள், தனது ஆகஸ்ட் மாத நகர சபை கொடுப்பனவான ரூ.15,000.00-ஐ பாடசாலை அதிபர் மற்றும் பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளர் றியாஸ் முகமட் அவர்களிடம் கையளித்தார்.

இதன் மூலம் ஸ்ரீ லங்கா டெலிகொம் நிறுவனத்தின் மூலம் குறித்த ஆய்வுகூடத்திற்கான இணைய வசதி பெற்றுக்கொள்வதற்கான உத்தேச செலவு நிறைவேற்றப்பட உள்ளது.

இந்நிகழ்வில் பாட ஆசிரியர் முகம்மத் ஷுஹைல், அபுல் ஹஸன் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 709492

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time