தொழிற்கல்வி சேவை – ‘1966’ துரித இலக்கம் அறிமுகம்.!!!
மாணவர்கள் இடைநிலைக் கல்விக்கு பிறகு தொழிற்கல்விக்குப் மாறுவது குறித்து துல்லியமான மற்றும் பயனுள்ள தகவல்களை வழங்க ‘1966’ தொழிற்கல்வி சேவை துரித இலக்கம் இன்று (08) உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது.
கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரும், பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமையிலும், திறன்விருத்தி மையம் (Nipunatha Piyasa) இல் இந்த சேவை தொடங்கப்பட்டது.
இந்த இலக்கத்தின் மூலம் மாணவர்கள் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மூன்று மொழிகளிலும் தொழிற்கல்வி தொடர்பான தகவல்களை பெறலாம்.
மேலும், தொழிற்கல்வி தொடர்பான கேள்விகளுக்கு AI Chatbot வழியாக தீர்வுகள் வழங்கப்படுவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த நிகழ்வில் உரையாற்றிய பிரதமர் ஹரிணி அமரசூரிய:
“புதிய பாடத்திட்டத்தின் கீழ் மாணவர்கள் அடிப்படைத் தொழிற்கல்வி கற்கத் தொடங்கும் நிலையில், மாறிவரும் கல்விச் சீர்திருத்தச் செயல்முறையுடன் நவீன தொழிநுட்பத்தை ஒருங்கிணைப்பது மிக முக்கியம். மாணவர்கள் நாளைய பணியிடத்தில் வெற்றிகரமாக நுழைவதற்குத் தேவையான மனித மற்றும் பௌதீக வளங்களை வளர்ப்பதற்காக தொழிற்கல்வி கட்டமைப்பு சீர்திருத்தப்பட வேண்டும்.”