யாழ்ப்பாணம் கடற்பகுதியில் கரையொதுங்கும் வெள்ளை நுரை; மக்கள் மத்தியில் பரபரப்பு.!!!
யாழ்ப்பாணம் வடமராட்சி கடற்பகுதியில் மர்மமான வெள்ளை நுரை கரையொதுங்கியதால் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இன்று (07) காலை பருத்தித்துறை இறங்குதுறையை அண்டிய கடற்பரப்பில் அதிகளவில் வெள்ளை நுரை கரைக்கு ஒதுங்கியதை உள்ளூர்வாசிகள் கவனித்துள்ளனர்.
கடற்கரைக்கு அடர்த்தியாக படிந்து காணப்பட்ட இந்த வெள்ளை நுரை எதனால் உருவானது என்பது தொடர்பாக இதுவரை தெளிவு கிடைக்கவில்லை. சம்பவத்தை அடுத்து, சுற்றுச்சூழல் அதிகாரிகளும், கடற்படை அதிகாரிகளும் சம்பவ இடத்தை பார்வையிட்டு ஆரம்பக்கட்ட ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர்.
இதுபோன்ற நிகழ்வு இதற்கு முன்பும் சில சமயங்களில் பதிவாகியிருந்தாலும், இம்முறை நுரையின் பரவல் அதிகமாக காணப்பட்டதாக உள்ளூர்வாசிகள் தெரிவித்துள்ளனர்.
சுற்றுப்புற வளங்கள் பாதிக்கப்பட்டனவா? கடல்சார் உயிர் அமைப்புகளில் மாற்றம் உள்ளதா? போன்ற கேள்விகள் எழுந்துள்ள நிலையில், அதிகாரிகள் விசாரணை முடிவுகளை எதிர்பார்க்க மக்கள் காத்திருக்கின்றனர்.





