உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

15.03
விளம்பர மோகத்தில்: தடுமாறும் மக்கள்.!!!
IMG-20260308-WA0020
பெண் எனும்: மானிட மகுடம்.!!!

களுவாஞ்சிக்குடி பகுதியில் தனியன் யானை அட்டகாசம்: பயிர் நிலங்கள், வர்த்தக நிலையங்கள் சேதம் – நடவடிக்கை கோரி மக்கள் எதிர்ப்பு.!!! 

-பாறுக் ஷிஹான்-

தனியன்  யானை ஒன்று  அத்துமீறி  நுழைந்து கடுமையான சேதங்களை ஏற்படுத்தி வருவதாக களுவாஞ்சிக்குடி பிரதேச  மக்கள் தெரிவித்துள்ளனர்.

குறித்த தனியன் யானையின்  அச்சுறுத்தல் இன்று இரவு வரை ஏற்பட்டுள்ளதாகவும் பயிர் நிலங்கள்  வளவுகள் மட்டுமன்றி  வர்த்தக நிலையத்தையும் உடைத்து சேதப்படுத்தியதாக குறிப்பிட்டனர்.

மேலும்  அந்தப் பகுதியில் மின்விளக்குகள் இன்மையினால்  மக்கள் குறித்த  யானையை காட்டுக்குள் விரட்டுவதில் அதிக சிரமங்களை எதிர்கொண்டதுடன்  அதிகாலை 7 மணி வரை மக்களை அச்சுறுத்தும் வகையில் யானைகளின் நடமாட்டம் காணப்பட்டுள்ளன.

இந்த சம்பவம் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டிருந்தாலும்  இதுவரை எந்தவொரு நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

அண்மைக்காலமாக யானைகள் இப்பகுதியில் சஞ்சாரம் செய்து வருவதாக பொதுமக்கள் குறிப்பிட்டனர்.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 710701

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time