தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு வீடுகளை புனரமைக்க – 2 லட்சம் பெறுமதியான காசோலைகள் வழங்கி வைப்பு.!!!
கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூகவலுவூட்டல் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ், தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு வீடுகளை புனரமைப்பதற்காக 2 லட்சம் பெறுமதியான காசோலைகள் இன்று திங்கட்கிழமை அதம்பாவா எம்.பி வழங்கி வைப்பு செய்யப்பட்டது.
இதன் இரண்டாம் கட்டமாக, அம்பாறை மாவட்ட பிரதேச செயலகங்களில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகள் தமது வீடுகளை பூரணப்படுத்த இந்நிதி வழங்கப்பட்டது. இதற்காக இலங்கை அரசியலமைப்பு பேரவையின் உறுப்பினர் மற்றும் அம்பாறை மாவட்ட கரையோர பிரதேசங்களில் அபிவிருத்தி குழு தலைவர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா தமது நிகழ்வில் நிதியை வழங்கி வைத்தார்.
சாய்ந்தமருது பிரதேச செயலகத்தில் நடைபெற்ற நிகழ்வில் பிரதேச செயலாளர், தேசிய வீடமைப்பு அதிகார சபையின் கல்முனை பிராந்திய உத்தியோகத்தர் சபேஸ்கான், மற்றும் பாராளுமன்ற உறுப்பினரின் பிரத்தியேக செயலாளர் S. இம்தியாஸ் ஆகியோர் கலந்துகொண்டு நிகழ்வை ஆதரித்தனர்.










