உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

March 24, 2026

Hot News

Print
மக்கள் ஒத்துழைப்பே பாதுகாப்பின் அடித்தளம்.!!!
15.03
விளம்பர மோகத்தில்: தடுமாறும் மக்கள்.!!!

Share :

2026 உயர்தரப் பரீட்சை விண்ணப்பங்கள்: இன்று முதல் – ஏப்ரல் 24 வரை விண்ணப்பிக்க அவகாசம்.!!!

2026 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர (A/L) பரீட்சைக்குத் தோற்றவுள்ள பாடசாலை மற்றும் தனியார் விண்ணப்பதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் இன்று முதல் கோரப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

இணையவழி மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. விண்ணப்பங்களை எதிர்வரும் ஏப்ரல் 24 ஆம் திகதி வரை சமர்ப்பிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரிகள் www.doenets.lk⁠� அல்லது www.onlineexams.gov.lk/eic⁠� ஆகிய இணையத்தளங்களில் நுழைந்து வழங்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்களுக்கு இணங்க விண்ணப்பங்களைப் பதிவு செய்ய வேண்டும்.

பாடசாலை விண்ணப்பதாரிகள் தங்களது பாடசாலை அதிபர்கள் ஊடாக விண்ணப்பிக்க வேண்டியதுடன், தனியார் விண்ணப்பதாரிகள் தமக்கு வழங்கப்பட்ட பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல் அல்லது தேசிய அடையாள அட்டை இலக்கத்தை பயன்படுத்தி நேரடியாக விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் இறுதி திகதி எக்காரணம் கொண்டும் நீடிக்கப்படமாட்டாது என்பதால், காலக்கெடுவிற்கு முன்பாகவே விண்ணப்பிக்குமாறு விண்ணப்பதாரிகள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

மேலதிக தகவல்களுக்கு 1911 துரித தொலைபேசி இலக்கம் அல்லது 011 2785922 என்ற எண்ணுக்கு தொடர்புகொள்ளலாம் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 718566

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time