புகையிரதத்தில் மோதி; 28 வயது இளைஞன் உயிரிழப்பு.!!!
(மு.கோகிலதாசன்)
கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கிச்சென்ற இரவு கடுகதி புகையிரதத்தில் மோதி நேற்று (6) இரவு ஒருவர் உயிரிழந்துள்ளதாக சந்திவெளி பொலிசார் தெரிவித்தனர்.
சந்திவெளி ஜீவநகர் பகுதியைச்சேர்ந்த இரு பிள்ளைகளின் தந்தையான 28 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மது போதையில் தண்டவாளத்தில் தலையினை வைத்து தூங்கியதினால் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
சடலம் ஏறாவூர் புகையிரத நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு, காலை வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு உடற்கூற்று பரிசோதனைக்காக கொண்டு வரப்பட்டுள்ளது.
விபத்து தொடர்பில் சந்திவெளி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
