உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

உங்களுடைய செய்திகளை எங்களுக்கு அனுப்பி வையுங்கள்

IMG-20260510-WA0104
ஈராக் மண்ணில் இஸ்ரேலின் ரகசிய ராணுவத் தளம்: மத்திய கிழக்கில் பதற்றம் அதிகரிப்பு.!!!
IMG-20260503-WA0077
வன்முறை கலாச்சாரம் அரசியலில்: வெற்றியா அல்லது தோல்வியா.???

Share :

ரமழான் காரணமாக நிந்தவூரில்:  அனைத்து தனியார் கல்வி நிலையங்களும் மார்ச் 25 வரை தற்காலிகமாக மூட அறிவுறுத்தல்.!!!

-நூருல் ஹுதா உமர்-

புனித ரமழான் மாதத்தையும் எதிர்வரும் நோன்புப் பெருநாளையும் முன்னிட்டு, நிந்தவூர் பிரதேச சபை எல்லைக்குட்பட்ட தனியார் கல்வி நிறுவனங்களை தற்காலிகமாக மூடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நிந்தவூர் பிரதேச சபையின் தவிசாளர் சட்டத்தரணி றியாஸ் ஆதம் சபையின் உறுப்பினர்களுடன் மேற்கொண்ட கலந்துரையாடலின் பிரகாரம் குறித்த கல்வி நிறுவனங்கள் 2026 மார்ச் 25 ஆம் திகதி வரை செயல்பாடுகளை நிறுத்தி வைக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

ரமழான் மாதத்தில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மார்க்க கடைமைகளில் முழுமையாக ஈடுபடக கூடிய சூழ்நிலையை கருத்தில் கொண்டு, அவர்களுக்கு ஏற்படும் சிரமங்களை குறைப்பதற்கும், அமைதியான முறையில் மத கடமைகளை நிறைவேற்றுவதற்கும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதற்கமைய, நிந்தவூர் பிரதேச சபை எல்லைக்குட்பட்ட அனைத்து தனியார் கல்வி நிலையங்களும் குறித்த அறிவுறுத்தலை பின்பற்றி, 2026 மார்ச் 25 ஆம் திகதி வரை தற்காலிகமாக மூட நடவடிக்கை எடுக்குமாறு பிரதேச சபை சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

Related News

பார்வை (Vision)

உண்மையை வெளிப்படுத்தும் முன்னணி செய்தி தளமாகத் திகழுதல்.

பணி (Mission)

​உண்மையை அடிப்படையாகக் கொண்ட துல்லியமான மற்றும் பாகுபாடற்ற செய்திகளை வழங்குதல்.

Search

Total Websites Views

Total Views: 806102

விளம்பரங்கள்

Kattankudy Prayer Time